Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளையும் மிரட்டும் ஜி.எஸ்.டி.!

மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி-யால் பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்பொழுது இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை விவசாயிகளையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்திய போது பிரதமர் நரேந்திர மோடியும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் ஒருமித்த குரலில் இந்த வரி விதிப்பு முறையால் சாதாரண ஏழை எளிய விவசாயிகளுக்கு எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்திருந்தார்கள். ஆனால்  நடைமுறை யதார்த்தம் விவசாயிகளை விரக்தி அடைய வைத்துள்ளது.

gst

உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது ஜி.எஸ்.டி-யால் இடுபொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கக்கூடிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில் போர்வெல் விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கியுள்ளார்கள். இதற்குத் தேவையான இடுபொருள்கள் வாங்கிய விவசாயிகள் இவைகளின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். உரங்களுக்கு 5 சதவீதமும், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு 12 சதவீதமும் வேளாண் கருவிகளுக்கு 28 சதவீதமும் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. ’ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் விற்கும் பொருள்களுக்கு இன்னும் கூடுதல் விலை வைத்துக் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இதனால் எங்களுக்கு ஏக்கருக்கு 3 ஆயிரம் வரை ரூபாய் வரையில் கூடுதல் செலவாகிறது’ எனப் புலம்புகிறார் விவசாயி ஒருவர். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close