Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க தீர்மானம் நிறைவேற்றம்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க-வின் மாநில நிர்வாகிகளுக்கான செயற்குழு மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை நடந்தது. பிஎல்ஸ் பேலஸ் மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலர் ஹெச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகப் பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் இறுதி நாளான இன்று ஐந்து பக்கத்திற்கு கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிஜேபி செயற்குழு கூட்டம்

தீர்மானத்தில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத்கோவிந்த்துக்கு ஆதரவு அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி சொல்லப்பட்டது. டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு இரண்டே வருடத்தில் அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் மத்திய அரசாங்கம் மகத்தான நினைவிடத்தை அமைத்தது தமிழர்களுக்கும் தமிழகத்திற்கு பெருமையாக கருதுகிறது. அரை நூற்றாண்டு காலமான தனுஷ்கோடி முதல் இராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தை அர்ப்பணித்த பிரதமருக்கு பாராட்டுகள். 

20ஆண்டுகளாக தொடர்ந்து விவாதப் பொருளாக மட்டுமே இருந்த ஜிஎஸ்டி மத்திய அரசு அமுல்படுத்தியிருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. வந்தேமாதரம் பாடலை பள்ளிக்கூடங்களில் கட்டாயம் பாடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்க்கதக்கது. தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த தமிழக அரசு குறிப்பாக அரசு பள்ளிகள் மீது அதிக அக்கறைகாட்ட வேண்டும். தமிழக அரசு வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி, பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட்டுறவு வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்தது போல தமிழக அரசும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close