Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய செய்தியாளர்கள்  

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, மதுரை மாவட்டத்திலுள்ள செய்தியாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொண்டாடின. மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், செய்தியாளர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை, தமிழக  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். மேலும், நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ-க்கள்  ராஜன்செல்லப்பா, மேலூர் பெரியபுள்ளான், ஏ.கே.போஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

mgr
   

எம்.ஜி.ஆரின் புகழைப் பற்றி சிறப்பாகப் பேசுகிறவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதுபோல செய்தியாளர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு வகையான கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. மதியம் அறுசுவை உணவு கொடுத்து, விழா சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதியம் வரை இருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார். மதியம் வரை அமைச்சர் செல்லூர்ராஜு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close