Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்விக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம்..!

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சட்ட விரோதமாகச் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு எதிராகவும் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்தும், அவர்களுக்குத் துணைபோகின்ற மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களைக் கண்டித்தும் இன்று, ஊழல் ஒழிப்பு அமைப்பினர் திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள், ' திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகம், 'இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்மூலம் 2017 மற்றும் 2018-ம் கல்வியாண்டில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்துவிட்டு, 150 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டது என்ற பொய்யான தகவல்களைத் தந்து அரசை ஏமாற்றியிருக்கிறது.

மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். எனவே, அவர்கள் மீதும் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீதும் அரசு சட்டரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம்செய்த கட்டணத்தை வசூலிக்காமல், அதைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்தின்மீது அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கும்பகோணத்தில் நடைபெற்ற தீ விபத்துக்குப் பிறகு, நீதிபதி சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும். ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகளைக்கொண்ட குழுவை அமைத்து, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும். அதில், முறைகேடாகச் செயல்படும் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க வேண்டும்' போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close