Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளைத் தத்தெடுக்க புதிய இணையதளம்..!

விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக, விவசாயிகளைத் தத்தெடுக்கும் வகையில் ஓர் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் தற்போது வைரலாகி வருகிறது. 

               விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம்

விவசாயிகளைத் தத்தெடுப்பது, மீனவர்களைப் பாதுகாப்பது என்ற நாட்டின் முக்கியமான இரண்டு பிரச்னைகளைக் கையிலெடுத்து களத்தில் இறங்கியுள்ளனர் சிலர். நாட்டின் இந்தத் தலையாய பிரச்னைக்கு உடனே தீர்வு காணும் விதமாக, இதற்கான ஆர்வலர்களை ஒருங்கிணைக்க ஓர் இணையதளம் உருவாகியுள்ளது. இதுதான்  (http://farmeradoption.in/)   அந்த இணையதள முகவரி. தற்போது இந்த இணையதளம், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதில் உறுப்பினராக இணைவதற்கு வயது வரம்பு ஏதுமில்லை. ஆனால், சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள்.

குழுவில் ஆண் உறுப்பினர்கள் 10 பேர், பெண் உறுப்பினர்கள் 10 பேர் என மொத்தம் 20 பேருக்கு மட்டுமே அனுமதி. 20 பேரைக் கொண்ட குழுவினர் இணைந்து, ஒரு விவசாயியைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் நுழைந்ததுமே, கண்ணில் தெரியும் முக்கியமான சில வரிகள், "நாம் விவசாயிகளுக்குப் பண உதவி செய்ய வேண்டியதில்லை. நல்ல ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குவோம். நல்லதொரு பாதுகாப்பு அரண் அமைத்து, அவர்களுக்குத் துணை நிற்போம். விவசாயிகளின் மகிழ்வான தருணங்கள், வேதனையான சூழல்கள் என அனைத்திலும் நாம் கலந்து நிற்போம். விவசாயிகள் அதிகம் நேசிக்கும் குழந்தைகள், அவர்கள் உருவாக்கும் பயிர்களே. அதுதான் மனித இனம் வாழப் பயன்படும் உயிராகும். அந்த உயிர்ப் பயிர்களை நாமும் நேசிப்போம். அரவணைப்போம்.


மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு உதவிகள், வங்கிக் கடன்கள் போன்றவற்றை விவசாயிகளுக்குப் பெற்றுத்தர, நம்முடைய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி, அவர்களை இதன்மூலம் வழிநடத்தலாம். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்துக்கு, சரியான நேரத்தில் துணைநின்று, அந்த முதுகெலும்பைப் பலப்படுத்துவோம். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்போம்" என்கிறது அந்த வரிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close