Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி..!

கரூர் மாவட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நுற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு கட்டமாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகளை இன்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தொடங்கிவைத்தார்.


கரூர் மாவட்டம், காந்திகிராமம் புனித தெரசா மேல்நிலைப் பள்ளியில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இன்று தொடங்கிவைத்தார்.

போட்டியில், 6 முதல் 8 -ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு, 'தமிழக ஒளி விளக்கு', 'தன்னிகரில்லா தங்கத் தலைவன்' மற்றும் 'ஏழைகளின் விடி வெள்ளி' என்ற தலைப்பிலும், 9 முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு 'திரையுலக சிற்பி', 'அண்ணாவின் இதயக் கனி' மற்றும் 'மக்கள் நாயகன்' என்ற தலைப்பிலும்,11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 'எம்.ஜி.ஆர் ஒரு சரித்திரம்', 'தமிழகத்தின் விடிவெள்ளி' மற்றும் 'பன்முக நாயகன் எம்.ஜி.ஆர்' என்ற தலைப்பிலும் இன்று பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த பேச்சுப் போட்டிகளில், கரூர் மாவட்டப் பள்ளிகளில் படிக்கும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவற்றில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களை நடுவர் குழுக்கள் தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடக்க இருக்கிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close