Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேரறிவாளனை பரோலிலாவது விடுதலைசெய்யுங்கள்..! அற்புதம்மாளின் கண்ணீர்க் குரல்

"ன் மகனுக்கு நேற்றோடு வயது 47. வயது கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால், விடுதலைதான் தாமதமாகிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விடுதலை செய்யமுடியாது என்கிறார்கள்.  நியாயமாகக் கிடைக்கவேண்டிய பரோலையாவது விரைந்து வழங்குங்கள் " என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அற்புதம்மாள்.

அற்புதம்மாள்

26 ஆண்டுகளாக கடுமையான சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளனின் விடுதலைக்காக, அவரின் தாயார் அற்புதம்மாள் பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகிறார். அதன்படி சிலநாள்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதுபற்றி ஏதும் முடிவுசெய்ய முடியாது. ஆனால் பரோலில் விடுவிப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் பேசி முடிவெடுப்பதாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருந்தார்.

பேரறிவாளன்

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் பேசியபோது, 'முதல்வரும், சட்டத்துறை அமைச்சரும் இரண்டொரு நாளில் முடிவெடுப்பதாகக் கூறினார்கள். நான் ஒவ்வொரு நாளும் காத்துக்கொண்டிருக்கிறேன். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுவரை ஏமாற்றத்தைத் தவிர நான் எதையும் சந்திக்கவில்லை. சட்டப்படியும் நீதிப்படியும்தான் நான் போராடி வருகிறேன். என் மகனுக்கு உண்டான நேர்மையான ஒரு மாத கால பரோலையாவது விரைந்து கொடுக்க வேண்டும். அதேபோல வழக்கை விரைவாக முடித்து, என் மகனை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மகனை விடுதலை செய்வேன் என்று வாக்குக் கொடுத்திருந்தார். அந்த வாக்கை தற்போதைய முதல்வர் காப்பாற்ற வேண்டும்." என்றார் கலங்கிய கண்களோடு.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close