Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சணலைக் கொண்டு ஜூவல்லரிகள்..! இது அவள் விகடன் பயிற்சி

வள் விகடன் சார்பாக இன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் ஜூட் ஜூவல்லரி மேக்கிங் வொர்க் ஷாப் நடைபெற்றது.

உமா ராஜ்

வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டும் வகையில், அவள் விகடன் வாசகிகளுக்காக சக்சஸ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமான இந்தப் பயிற்சி வகுப்பில், 200-க்கும் மேற்பட்ட வாசகிகள் கலந்துகொண்டார்கள். சணல்களைக் கொண்டே கழுத்தணி மற்றும் காதணிகளை வடிவமைக்கும் இந்தக் கலையை சென்னை கே.கே நகரைச் சேர்ந்த உமா ராஜ் கற்றுக்கொடுத்தார். 

ஜூவல்லரி

“ஜூட் ஜூவல்லரி செய்வதற்கான பயிற்சியை நான் பலருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறேன். ஆனால், அவள் விகடன் மூலமாக இன்று ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சொல்லிக்கொடுத்ததை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இனி தங்களால் முடிந்த சிறு சிறு பொருள்களை இவர்கள் செய்து, வருமானம் ஈட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் உமா ராஜ். 

பயிற்சி

சணலைக் கொண்டே இவ்வளவு அற்புதமாக ஜூவல்லரி டிசைன் பண்ண முடியுமா என்ற கேள்வியோடுதான் இந்தப் பயிற்சிக்கு வந்தோம். ஆனால், நேரில் பார்த்த பிறகு எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனி நாங்களும் தொழில் முனைவோர்கள்தான் என்றார்கள் பயிற்சியில் கலந்துகொண்ட வாசகிகள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close