Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிசை கொளுத்தப்பட்ட விவகாரம்; தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் விசாரணைக்கு உத்தரவு

திருச்சியில் தலித் பெண்ணைத் தாக்கியது தொடர்பாகவும் குடிசையைக் கொளுத்தியது தொடர்பாகவும் விசாரணைசெய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர்

சில வருடங்களுக்கு முன்பு, மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள தத்தமங்கலம் ஊராட்சியில், சிவசக்தி நகர் எனும் பகுதியில் 56 பேருக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரும், வழங்கப்பட்ட அந்த இடத்தின் பட்டாவை இட உரிமையாளர்களுக்குக் கொடுக்காமல், அந்தக் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருணாசலம், ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் சுப்பையா உள்ளிட்ட சிலர், அந்த இடங்களை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைசெய்துள்ளனர். இதற்கு அந்தப் பகுதியில் வசித்துவரும் ஈஸ்வரி என்பவர் முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். இது தொடர்பாக, லால்குடி நீதிமன்றத்தில் ஈஸ்வரி வழக்கு தொடர முயற்சி எடுத்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 24-ம் தேதி இரவு, ஈஸ்வரியின் குடிசை வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில், ஈஸ்வரி வீடும், பக்கத்தில் இருந்த குடிசைகளும் எரிந்து சாம்பலாயின. மேலும், ஈஸ்வரியின் கை, கால்களைக் கட்டி வீதியில் இழுத்துச்சென்று, தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காயமடைந்த ஈஸ்வரியை மீட்ட தீயணைப்பு வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது நாள்வரை ஈஸ்வரி ஊர் திரும்பவில்லை.

இந்தச் சம்பவம்குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், லால்குடி வருவாய் வட்டாட்சியர் மகாலட்சுமி, டி.எஸ்.பி-க்கள் செட்ரிக் மேனுவல், கோவிந்தராஜ், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளர் பாலசந்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் மதியழகன், இன்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், தாக்குதலுக்குள்ளான ஈஸ்வரி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்தப் பகுதியில் இருந்த தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், ஈஸ்வரிக்கு உதவிய தலித் சமூகத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுள்ளது. அந்தப் பகுதிக்குத் தேவையான மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தர மறுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.  

பாதிப்புக்குள்ளான ஈஸ்வரியை போலீஸார் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும். சிவசக்தி நகரில், அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சார வசதி போன்றவற்றை மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு கொடுத்த இலவச வீட்டுமனைப் பட்டா, உரியவர்களிடம்தான் உள்ளதா என்பதனை மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் ஆய்வுசெய்ய வேண்டும்” என்று தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் உத்தரவிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close