Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி. தினகரன் பக்கம் செல்கிறாரா தீபக்?

இதுவரை நடராஜன் வசமிருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தற்போது டி.டி.வி. தினகரனிடம் என்ட்ரி ஆகியுள்ளார்.
டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமி, கடந்த 27-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு 28-ம் தேதி, தஞ்சை காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. சசிகலா உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி சோகத்தில் மூழ்கி இருந்தனர். முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மாலையுடன் தஞ்சை காந்தி நகருக்கு வந்தார். தீபக்கை பார்த்த திவாகரன், கும்பிடுபோட்டு வரவேற்றார். தினகரனும் தீபக்கை பார்த்து புன்னகைசெய்தார். வீட்டின் உள்ளே சென்ற தீபக், டாக்டர் வெங்கடேஷைப் பார்த்ததும் கைகளை விரித்தப்படி அழத்தொடங்கினார். தீபக்கின் வரவை எதிர்பாராத சசிகலா உறவினர்கள், சிறிது நேரம் ஆச்சர்யத்துடன் அவர் அழுததைப் பார்த்து எல்லோரது கண்களிலும் கண்ணீர். 

பின்னர், டாக்டர் வெங்கடேஷ் அருகே சென்ற தீபக், அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு வருத்தத்தைத் தெரிவித்தார். சசிகலா உறவினர்களின் துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத தீபக், முதன்முதலாக டி.டி.வி. தினகரனின் மாமியார் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது, டி.டி.வி. தினகரனுக்கு நெகிழ்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  

எப்போதும் நடராஜன் அருகில் தீபக் இருப்பார். அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை ஏற்க டி.டி.வி. தினகரன் தகுதியற்றவர், அவரைக் கட்சித்தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொன்ன தீபக், தற்போது டி.டி.வி. தினகரனுக்கு ஆதவாகச் செயல்படத்தான்  இங்கு வந்து கலந்துகொண்டுள்ளார் என்கிறார்கள், மன்னார்குடிக்கு நெருக்கமானவர்கள். 
    

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close