Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி! முடங்கிப்போன முடுவார்பட்டி! 

மதுரை பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி மற்றும் ஆதனூர் கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அதிகப்படியான மக்கள் பாதிகப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி கிராம சமூக ஆர்வலர்கள் சிலரை விசாரித்தோம் . மதுரையில் டெங்கு ,  மலேரியா போன்ற நோய்கள் பரவிவருகின்றன. சுகாதார துறையின் சார்பாக ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பது , அரசு மருத்துவமனைகளில் நிலவேம்புக் கசாயம் மற்றும் மருந்துகள் கொடுப்பது என்று தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். அலங்காநல்லூர், பாலமேடு சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் காய்ச்சல் அசாதாரணமாகப் பரவிவருகிறது .

dengue

குறிப்பாக முடுவார்பட்டி, ஆதனூர் கிராமங்களில் அதிகமான காய்ச்சல் காணப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீவிரம் அடையும்போது அரசு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். தனியார் மருத்துவமனையில் எடுக்கப்படும் ரத்தப் பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் இல்லை சாதாரண காய்ச்சல்தான் என்று சொல்கிறார்கள். யார் சொல்வது உண்மை என்று தெரியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர் . இந்நிலையில், முடுவார்பட்டியில் அதிப்படியாக காய்ச்சல் இருந்து வந்ததால்,  செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பாக நிலவேம்புக் கசாயம் கொடுத்துவருகின்றனர். மேலும், துப்புரவுப் பணியாளர்களைக்கொண்டு கிராமம் முழுவதும் சுத்தம் செய்யும்  பணியிலும் ஈடுபட்டுள்ளனர் . விழிப்புஉணர்வுக் கூட்டங்களும் நடத்தப்படுகிறது. காய்ச்சல் இருக்கும் பொதுமக்கள், தங்களுக்கு டெங்கு உள்ளதா, இல்லை சாதாரண காய்ச்சல்தானா என்று தெரியாமல் புலம்பிவருகின்றனர். இதனால், கிராம மக்கள் சிலர் பயந்துகொண்டு வெளியூர்களுக்குக் கிளம்பிவருகின்றனர் .

நிலவேம்பு கசாயம்

இந்நிலையில், டெங்கு காய்ச்சல் இல்லை; சாதாரண காய்ச்சல்தான் என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கூறப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அழகுமீனாள் என்ற 8-வயது சிறுமி, இன்று அதிகாலை இறந்துவிட்டார். இதனால், மதுரை மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட கிராமத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close