Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் போராட்டக்களத்தில் மு.க.ஸ்டாலின்!

ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக, கதிராமங்கலத்தில் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், கதிராமங்கலம் வந்து நேரடியாகத் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கதிராமங்கலம் வந்துள்ளார்.


நேரடியாக போரட்டகளத்திற்கு வந்த அவர்,  அங்கு போராடும் மக்களிடம் தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், போரட்டக்கரர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "ஜி.எஸ்.டி, நீட், உணவு பாதுகாப்பு மசோதா என மத்திய அரசின் திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இன்று அவரின் பெயரால் ஆட்சி நடத்தும் இவர்கள் அந்த திட்டங்களை ஏன் எதிர்க்கவில்லை?. தி.மு.க ஆட்சி காலத்தில் தான் ஒ.என்.ஜி.சி க்கு அனுமதி  வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள். தி.மு.க ஆட்சி காலத்தில் ஒ.என்.ஜி.சி க்கு ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு பிறகு ஒ.என்.ஜி.சி க்கு தமிழகத்தை தாரை வார்த்தது அ.தி.மு.க அரசு தான். இதற்கு மேலும், நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று  கூறினால், நாங்கள் கொண்டு வந்த சேது சமுத்திர திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை முடக்கிய அ.தி.மு.க, மக்களுக்கு எதிரான இந்த திட்டத்தை என் தடுக்கவில்லை.  மக்களுக்கு எதிரானது என்றால் தி.மு.க கொண்டு வந்திருந்தாலும் அதனை ரத்து செய்திருக்க வேண்டும். நாங்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டல் தருவதில்லை. ஆனால் அவர் நடிகைகளை சந்திக்கிறார். அ.தி.மு.க ஆட்சி அகற்றபட வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு  வரும். உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் " என்றார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close