Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய அமைச்சருக்குக் கிடைத்த தண்டனை!

ஜெய் ஸ்ரீராம் எனக்  கோஷமிட்ட பீகார் அமைச்சர் பெரோஸ் அகமதுவுக்கு பாட்வா பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம் அமைச்சருக்கு பாட்வா
 

பீகாரில் ஆட்சியமைத்துள்ள நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பெரோஸ் அகமது பொறுப்பேற்றுள்ளார். பீகார் சட்டசபையில் வெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் நிதிஷ்குமாரின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. சட்டசபைக்கு வெளியே திரண்ட பாரதிய ஜனதா மற்றும் நிதிஷின் ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பினர். உற்சாகமிகுதியில் அமைச்சர் பெரோஸ் அகமதுவும் ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பினார்.

இதையடுத்து, வடமாநிலங்களில் இயங்கி வரும் இம்ராத் ஷரியா  என்கிற அமைப்பு பெராஸ் அமகதுவுக்கு பாட்வா பிறப்பித்துள்ளது.அமைப்பின் தலைவர் சுகைல் கூறுகையில்,'' பிற மதத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர் இஸ்லாமியராக இருக்க முடியாது. அதனால், பெரோஸ் அகமது மன்னிப்பு கேட்க வேண்டும். பிற மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவரை இஸ்லாமிய பெண் திருமணம் புரிந்து கொள்ளமாட்டார். பெரோஸ் அகமது மன்னிப்பு கேட்ட பின்,  மீண்டும் அவரின் மனைவியைத் திருமணம் செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் பெரோஸ் அகமது விடுத்துள்ள அறிக்கையில், ''இஸ்லாம் அனைத்து மதத்தையும் மதிக்கக் கற்றுக் கொடுத்துள்ளது. ஜெய் ஶ்ரீராம் என்று சொன்னேன் என்றால், அதன் வழியாக இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்யவே விளைகிறேன் என்று அர்த்தம். தேவையில்லாமல் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்'' எனக் கூறியிருந்தார். 

தற்போது, பெரோஸ் அகமது மன்னிப்பு கேட்டுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close