Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்குத் தகுந்த ஊதியம் வேண்டும்! கோரிக்கை வைக்கும் ஃபேஸ்புக் சிஓஓ

பெண்களுக்கு

பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்குத் தகுந்த ஊதியம் வழங்க வலிமையான கொள்கைகள் வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (சிஓஓ) ஷெரில் சாண்ட்பர்க் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், ''சிறு வயது பெண்கள் கூட தலைமைப் பொறுப்பை ஏற்கலாம். அவர்கள் யார், என்னவாகப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தும் தீர்மானிக்கப்பட வேண்டும். பாலினத்தை வைத்து தலைமைப் பொறுப்புகளுக்கு வரவேண்டியவர்கள் தீர்மானிக்கப்படக் கூடாது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் இருக்கும் ஊதிய வித்தியாசம் சரி செய்யப்பட வேண்டும். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமான அளவில் முன்னேறி செல்ல முடியாமல் அல்லது ஊதிய உயர்வுகோர முடியாத அளவு தங்களின் திறன்களை குறைத்து மதிப்பிடுகின்றனர். 

பெண்களுக்கு நல்ல முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பொது மற்றும் கார்ப்பரேட் கொள்கைகள் அவ்வாறு அமைய வேண்டும். ஆண்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பெண்களும் விண்ணப்பிக்கின்றனர். ஆண்கள் வேலை செய்யும் அதே நேரம் பெண்களும் வேலை செய்கின்றனர். அதுவே இதற்கு பதிலாகவும் அமைந்துள்ளது'' என்று கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close