Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை, கடந்த 19-ம் தேதி, நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள சிதம்பரம், கடலூர், புவனகிரி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 45 கிராமங்களில், சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய பணிகளுக்காகவே அரசாணை நிறைவேற்றப்பட்டது. இதே சூழ்நிலையில் நெடுவாசல், கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டம் நடைபெறுவதால், 45 கிராமங்களில் எண்ணெய் ஆய்வுகள் நடக்காது எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தத் திட்டம் சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க உள்ளது. சாலைகள், ரயில்பாதைகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்காக மத்திய அரசின் தரப்பில் 146 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. அனைத்துத் தரப்பிலிருந்தும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் அரசாணையை எதிர்த்து வழக்குத் தொடங்கப்பட்டு,அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் வழக்கு - உயர் நீதிமன்றம்

இது சம்பந்தமாகப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வனிடம் பேசினோம். " எண்ணெய் எடுப்பதற்கான திட்டத்தின் அடுத்தகட்ட அறிவிப்புதான், பெட்ரோ-கெமிக்கல் காம்ப்ளக்ஸ் திட்டம். இதற்காக 45 கிராமங்களை அறிவிக்கிறோம் எனத் தமிழக அரசு பொதுவாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு முறையாக எந்த கிராமத்துக்கும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டம் ஏற்கெனவே ரசாயன நிறுவனங்களால் நிரம்பி வழிகிறது. அங்கேயே மீண்டும், இந்தத் திட்டத்தைத் தொடங்குவது அந்த மாவட்ட மக்களுக்குப் பெரிய சுற்றுச்சூழல் கேட்டைத் தரும். அரசாணை வெளியிட்டால், அதற்குரிய கிராமத்தின் பெயர்கள், எந்த இடங்கள் என்பதையும் அரசு குறிப்பிட்டுக் காட்டியிருக்க வேண்டும். அப்படி எந்த நிலங்களை எடுக்கப்போகிறோம், எவ்வளவு எடுக்கப் போகிறோம் என்பது பற்றி அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் கிராம மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தால், ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டம் மேலும் சீர்கெட்டுப்போகும். பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் வருவதால், ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்படும். ஏற்கெனவே, நெய்வேலியில் ஆரம்பித்த தொழிற்சாலை நிலங்களின் உரிமையாளர்களுக்கே அறிவிக்கப்பட்ட தொகை போகவில்லை. அவர்களும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு 'வேலை தருகிறோம்' என்று கொடுத்த எந்த வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இப்போது அறிவித்திருக்கும் அரசாணையின்படி, மக்களுக்கு எப்படி முழுமையாகக் கிடைக்கும் என நம்ப முடியும். எனவேதான், இந்தத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம்" என்றார்.

தேனி, பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து தடை வாங்கியதில், பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close