Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை அவசியம் - உயர் நீதிமன்றம்

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.


சட்டசபையிலும் இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது. இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியான டி.கே.ராஜேந்திரனின் பதவியை மேலும் நீட்டித்ததுக்கு எதிராக தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், " இந்த விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது கவனிக்கத்தக்கது. டிஜிபி, காவல்துறை உயர் அதிகாரிகள்  மீது லஞ்ச புகார் என்பது மிக முக்கிய பிரச்னை. அதனால் இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை அவசியம்"  எனத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடயிருப்பதால் பிற்பகலில் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழக அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முக்கிய வழக்கு ஒன்றில் உயர்நீதி மன்றத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close