Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு மணல்குவாரி மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு!

அரசு மணல் குவாரி மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ளது மதகளிர்மாணிக்கம் கிராமம். இங்கிருக்கும் வெள்ளாற்றில் கடந்த ஒரு வருடமாக அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. "இக்குவாரி மூலம் மணலை சுரண்டி எடுக்கப்படுவதால், இதன் சுற்றுவட்டார பகுதிகளான குணமங்கலம், பள்ளிப்பாடி, எசனூர், கீரனூர் என 25 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர்த் தட்டுபாடு ஏற்பட்டதால் இக்குவாரியை மூட வலியுறுத்தி அக்கிராமமக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அத்தோடு, இக்குவாரியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லையென்று லாரி டிரைவர்களும் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மணல்வேண்டி ஆன்லைனில் புக் செய்பவர்களுக்கு சரிவர மணல் கொடுக்காமல், அதிகப்படியான பணத்தை வாங்கிக்கொண்டு  அவர்கள் இஷ்டத்துக்கு ப்ளாக்கில் மணல் விற்பனை செய்கிறார்கள்" என்று இக்குவாரி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், இக்குவாரி மீது மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்கள் சேதமடைந்ததால் மணல் குவாரி இன்று மூடப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர், "குவாரி பக்கத்திலிருக்கும் கிராமத்தில் கோயில் திருவிழா நடக்கிறது. அந்த பட்டாசுகளை இங்கு வைத்து வெடித்திருக்கிறார்கள்" என்று சம்பவத்தை மூடி மறைக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close