Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாலையில் கிடந்த 60 பவுன் தங்க நகை: நெகிழவைத்த ஆட்டோ டிரைவர்


நேர்மையான ஆட்டோ டிரவர்நேர்மையான ஆட்டோ டிரவர்

கோவை ஆர்.எஸ்.புரம்  டி.பி ரோடு பகுதியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனுசாமி, இன்று காலை   சாலையில் கண்டெடுத்த 60 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த சம்பவம் கோவை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவை கமிஷனர் அமல்ராஜ்,  முனுசாமியை நேரில் அழைத்துப் பாராட்டியதோடு, 1,000 ரூபாய் ரிவார்டு  கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளார். 

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பாக,  ஆட்டோ டிரைவர் முனுசாமியிடம் பேசினோம், “காலையில் வழக்கம்போல  ஸ்டாண்டுக்கு வந்துட்டேன். போஸ்ட் ஆபீஸை ஒட்டி  எங்க ஆட்டோ ஸ்டாண்டு இருக்கு. வண்டிங்க நிறைய போகும் ரோடு அது.  ஏதேச்சையா ரோட்ல பார்க்கும்போது, அங்க கெடந்த ஒரு பொட்டலம் என் கண்ணுல பட்டுச்சி. உடனே ஓடிப்போய் எடுத்து பிரிச்சுப்பார்த்தேன். தங்க நகைகளும் தங்கக் காசுகளும் அதுல இருந்துச்சி. உடனே, எங்க சங்கத்துக்கு தகவல் சொல்லி, போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டேன். கமிஷனர் அமல்ராஜ் சார் நேர்ல கூப்பிட்டு பாராட்டி, 1,000 ரூபாய் கொடுத்தார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி என்ற முனுசாமி,

சிலபேர் எப்படிப்பா உனக்கு அவ்வளவு நகையைக் கொடுக்க மனசு வந்துச்சினு கேட்டாங்க, “நான் தெனமும் 100-க்கும் 200-க்கும் கஷ்டப்படுறவன். எனக்கு காசோட அருமை தெரியும். அதைச் சம்பாதிக்கிறதுக்கு படுற கஷ்டமும் தெரியும். என் குடும்பம் கஷ்டப்படுதுதான். நான் தினமும் வேலைக்கு வந்தாதான் சோறு. ரெண்டு பிள்ளைங்க இருக்குங்க.  அதுக்காக இந்த நகையை வீட்டுக்கு தூக்கிட்டுப் போயிட முடியுமா. இவ்வளவு நகைகளையும் சம்பாதிக்க இதோட சொந்தகாரங்க எவ்வளவு கஷ்டப்பட்ருப்பாங்க. அதோட வலி எனக்குத் தெரியும். யாரோ ஒருவருடைய  வயிறு எரியுறதுல என் வீட்டுல சோறு வேகணுமா. அந்தப் பாவம் எனக்கு வேண்டாம்ங்க. கூழோ கஞ்சியோ அது நான் சம்பாதிக்கிற காசுலதான் குடிப்பேன்'' என்றார்.

அந்த நகைககள், ஒரு பேப்பர் கடைக்காரருக்குச் சொந்தமான நகை என்பதும், வங்கியின் லாக்கரில் வைக்கச் செல்லும் வழியில் கீழே தவறவிட்டிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நகைகளை,  அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close