Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

காலிக்குடத்துடன் முற்றுகை

குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் வறட்சி நிலவுகிறது. விவசாயம் செய்ய முடியாத சூழலில், பெரும்பாலான கிராமங்களில் குடிநீருக்குக்கூட பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளின் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,மாடுகளுக்கும் தண்ணீர் கொடுக்க முடியாத நிலைமை உள்ளது. இதைச் சமாளிக்க, அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லை மாவட்டம் கொங்கந்தான்பாறை ஆதிதிராவிடர் காலனியில், கடந்த 6 மாதங்களாக குடிநீர் வராததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். 

இதேபோல, கீழப்பிள்ளையார் குளம் கிராமத்திலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தும் ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதில் மோட்டார் அமைக்கப்படாததால், பயனற்ற நிலை நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், தண்ணீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் தண்ணீருக்காக தவிக்கும் நிலைமை உள்ளது.

கோவிலாங்குளம் கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்ததனர். தங்கள் கோரிகையை வலியுறுத்தி, கோஷமிட்டதுடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு, தண்ணீர் கிடைக்கும் என்கிற நம்பிகையுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close