Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீட்'டுக்கு எழுந்த ஆதரவு; எதிர்ப்பு கோஷம்! கலெக்டரை மிரளவைத்த மாணவர்கள்

நீட் தேர்வுப் பிரச்னையில்  என்ன முடிவு எடுப்பது என்று  தெரியாமல் மாணவர்கள் திணறிவருகின்றனர்.  'நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும்' என்று போராட்டங்கள் வலுத்துவருகின்றன. பி.ஜே.பி., ஹெச்.ராஜாவோ, நீட் தேர்வின் நன்மைகுறித்து விளக்கம் அளித்துவருகிறார். இந்நிலையில்,'நீட் தேர்வு வேண்டும்' என்று மாணவர்களில் ஒரு தரப்பும், 'நீட் தேர்வு   வேண்டாம்' என்று  மற்றொரு தரப்பும்  முறையிட்டு வருகின்றன. இன்று, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “நீட் தேர்வுக்காகப் படித்துத் தேர்வு எழுதி, நீட் தேர்வில் அதிகமாக மதிப்பெண் எடுத்துள்ளோம்.

neet

எங்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ சீட் வேண்டும்” என்று ஒரு தரப்பு மாணவர்களும், “நாங்கள் பள்ளி அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளோம். எங்களுக்கு நீட் விலக்கு வேண்டும்” என்று இன்னொரு தரப்பு மாணவர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். கருத்து வேறுபாடுகொண்ட மனுவால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

neet

இரு அணிகளும்  அருகருகே நின்று நீட் வேண்டும் , நீட் வேண்டாம் என்று கோஷமிட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவல்துறையினர், இரு தரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். மாவட்ட ஆட்சியர் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அரசுக்குப் பரிந்துரைசெய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close