Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் புதிய பிரதமர் யார்? நாளை தெரியும்

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகிய நிலையில் புதிய பிரதமரை நாளை தேர்ந்தெடுக்க உள்ளனர். பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தானில் வலுவாக கோரிக்கை எழுந்த பிறகு தனது பிரதமர் பதவியை இழந்திருக்கிறார் நவாஸ் ஷெரீஃப். அடுத்த பிரதமராக தனது சகோதரர் ஷாபஸை நியமிக்க ஷெரீஃப் பரிந்துரைத்தார். 

பாகிஸ்தான்

இந்நிலையில் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் தகுதி பெறும் வரை இடைக்கால பிரதமராக பாகிஸ்தான் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹாகித் ககான் அப்பாஸி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சட்ட வல்லுநர்கள் பாகிஸ்தானின் புதிய பிரதமரை நாளை, செவ்வாய் அன்று தேர்ந்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி நாளை பாகிஸ்தான் புதிய பிரதமர் யார் என்பது தெரிய வரும். 

பாகிஸ்தான் அரசியலில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம் சுதந்திரம் அடைந்தது முதல் இப்போது வரை எந்தப் பிரதமரும் தங்களது பதவிக் காலத்தை நிறைவு செய்யவில்லை என்பதுதான். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close