Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி... நெய்வேலியில் பதற்றம்!

வடலூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள்மீது போலீஸ் தடியடி நடத்தியதால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    

 

 

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கெனவே செய்துவந்த மாதம் 26 நாட்கள் வேலையை 19 நாட்களாக குறைத்துள்ளது என்.எல்.சி. நிர்வாகம். இதைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதியிலிருந்து வேலை நிருத்தம் செய்து, பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இதற்கு, அனைத்துத் தொழிற்சங்கங்களும் தி.மு.க., பா.ம.க., த.வா.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவருகிறார்கள். 


 இன்று 20-வது நாளை எட்டிய இந்தப் போராட்டம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு வந்து, வடலூர் நான்குமுனை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை களைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர். அதற்கு அவர்கள், கோரிக்கை நிறைவேறும் வரை இங்கிருந்து களைந்துசெல்ல மாட்டோம் என்றனர். இதனால், போலீஸாருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த போலிஸார், திடீரென்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலருக்கு மண்டை உடைந்தன. கை, கால்களில் அடிப்பட்டு நாளா பக்கமும் சிதறி ஓடினார்கள். இதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. 
                               

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close