Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரையில் 225 கிலோ கஞ்சா சிக்கியது!

 

kanja seized

மதுரை தத்தனேரி பகுதியில், ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 225 கிலோ கஞ்சாவை காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் எஸ்.ஐ கார்த்திக்செல்வம் தலைமையில் செல்லூர் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல் மூலம் பிடித்துள்ளனர்.  மேலூர் திருவாதவூர் பகுதியைச் சார்ந்த கார்த்திக் என்பவர் பிடிபட்டார். மேலும், தலைமறைவான அய்யம்பிள்ளை, விஜயகுமார், சையது இப்ராஹிம் உள்ளிட்ட நபர்களை காவல்துறை தேடிவருகிறது.  பிடிபட்ட கார் உரிமையாளர் பற்றியும் விசாரணை செய்துவருகின்றனர்.

மதுரைக்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கிலோ கணக்கில் கடத்தப்பட்டு. மதுரையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சப்ளை செய்வதாகவும். குறிப்பாக கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து சில்லறை வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை காவல்துறை சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை மறைமுகமாக சோதனை செய்துவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close