Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

பெண்

 

குழந்தைப் பருவம் முதல் வயோதிகம் வரை ஆணினம் பெண்ணுடல் மீது நிகழ்த்தும் வன்மம் மிகவும் கொடுமையானதாக உள்ளது. அரியானா மாநிலத்தில் நடந்துள்ள அந்தச் சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. விவாகரத்துக்கு சம்மதிக்காத மனைவியை நண்பர்களை விட்டு பாலியல் பலாத்காரம் செய்யச் சொன்ன கணவனின் வக்கிரத்துக்கு என்னவென்று பெயர் வைப்பது. 

பாகிஸ்தானில் தன் சகோதரியைப் பாலியல் பலாத்காரம் செய்தவனின் சகோதரியைப் பலாத்காரம் செய்வதே நீதி என்று உள்ளூர் பஞ்சாயத்து உளறியதில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ரணம் ஆறும் முன் வந்துள்ள இந்தச் செய்தி உள்ளம் கொல்வதாக உள்ளது. 

அரியானா மாநிலம் சிர்ஷா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்குதான் இந்த அவலம் நடந்துள்ளது. இவர் கணவர் விவாகரத்து செய்ய விரும்பினார். இதற்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் நண்பர்கள் 3 பேரை அழைத்து வந்து தன் மனைவியைப் பலாத்காரம் செய்யும்படி தெரிவித்துள்ளார். ஆபத்தை அறிந்த அந்தப் பெண் தப்பியோடியுள்ளார். துப்பாக்கி முனையில் அந்த அபலைப் பெண் மூன்று பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். 

பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப் பெண்ணை மூன்று நபர்களும் நிர்வாணமாக சாலையில் வீசிச் சென்றுள்ளனர். கடந்த 29-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி மற்றும் பலாத்காரம் செய்த 3 நபர்கள் என மொத்தம் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பெண்ணுடல் மீது ஆணுக்கு ஏன் இத்தனை வன்மம் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close