Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாமீன் பெற்றும் வெளிவர முடியாத நிலையில் பேராசிரியர் ஜெயராமன்!

பேராசிரியர் ஜெயராமன்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஓ.என்.ஜி.சி சொத்துகளைச் சேதப்படுத்தியதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் ஓ.என்.ஜி.சி மேலாளர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில்  காவல்துறையினர் பேராசிரியர் ஜெயராமனைக் கைது செய்தனர். பேராசிரியர் ஜெயராமன் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி பேராசிரியர் ஜெயராமன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால், கடந்த ஜூன் 30-ம் தேதி, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்ட வழக்கில் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜெயராமன் உள்ளிட்ட  8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஜாமீன் பெற்றாலும், அவர் மீது வேறு வழக்குகள் இருப்பதால் தற்போது சிறையிலிருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close