Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க விழாவில் கமல்ஹாசன்!

தி.மு.க-வின் அதிகாரபூர்வப் பத்திரிகையான `முரசொலி' தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதை முரசொலி பவள விழாவாகக் கொண்டாட தி.மு.க திட்டமிட்டிருக்கிறது. 

கமல்

ஆகஸ்ட் 10 மற்றும்  11- ம் தேதிகளில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. `இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்' எனச் சொல்லப்பட்டது. இதற்கான அழைப்பிதழை சில தினங்களுக்கு முன்  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கியிருந்தார். இந்நிலையில், முரசொலி பவள விழா தொடர்பான அழைப்பிதழில் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்குவார் என அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கமல் அலுவலகத்தில் தொடர்புகொண்டு கேட்டோம்.  

''ஆமாம். முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கமல் பேசவிருக்கிறார்'' என்றனர். கமல்ஹாசன் அ.தி.மு.க அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில், கமல் தி.மு.க கட்சியின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close