Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகள் எப்போது மேலாதிக்க நிலையை அடைவார்கள் தெரியுமா?

குழந்தை

ற்போது வளர்ந்துவரும் குழந்தைகள் பெரியவர்களைவிடவும் அதிபுத்திசாலிகளாக இருந்து வருவதை நம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். அறிவு சார்ந்தும், திறமை சார்ந்தும் பல குழந்தைகள் தனித்துவமாக தெரிவதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும், புதுப்புது தொழிநுட்ப விஷயங்களையும் எளிதில் உள்வாங்கிக் கொள்கிற திறமையுடன், ஒரு சில இடத்தில் தன் மேலாதிக்க நிலையினால் தனக்குத் தேவையான பொருள்களையோ, விஷயத்தை அடைவதும் ஒரு மனநிலையாக இருக்கிறது. இது குறித்து, ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். 

பதினேழு மாதமே ஆன குழந்தைக்கும் மேலாதிக்க நிலையை உணருகின்ற திறன் இருக்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி. தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் உணர்வும், கூடவே, ஆதிக்கம் செலுத்தும் திறனும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. 

வாஷிங்டன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஜெசிகா என்பவர், 'குழந்தைகள் பெரியவர்களைவிட எளிதில் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை தெரிந்துகொள்வார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது தன்னைச் சுற்றியுள்ள உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது போன்ற சூழ்நிலைகளையும், அதைச் சார்ந்த நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள உதவுவது பதினேழு மாதத்தில் குழந்தைகள் உணரும் மேலாதிக்க நிலையின் தாக்கம்தான். இதற்காக என்பது குழந்தைகளை எடுத்துக்கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சியில்தான் இந்த விஷயத்தை அறிந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close