Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில், 15 பயனாளிகளுக்கு சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் வழங்கினார். மேலும், பொதுமக்களிடம் இருந்து 187 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது எந்தவித காலதாமதமும் இல்லாமல், 15 நாள்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர்.

கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலத்துறையின் சார்பில், கட்டுமான மற்றும் உழைக்கும் தொழிலாளர்களுக்கான இயற்கை மரணம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு சுமார் ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு 31 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. திருமண உதவித்திட்டத்தின் கீழ் 2 பயனாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 2 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close