Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உங்களுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு நண்பா...' - கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் குஷ்பு!

குஷ்பு


விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களிலும், டீ இடை வேளைகளிலும் பேச்சாக இருந்துவருகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான குஷ்பு ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். ட்விட்டரில் குஷ்புவைத் தொடர்ந்து வந்த அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவருடைய ட்விட்டர் பேஜைப் பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 985k-க்கு மேல். இந்நிலையில், தற்போது  திடீரென கமலுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

கமல்


பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்துக்குள்ளாகவே பட்டிதொட்டியெல்லாம் பேச வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி ரீச் ஆனதுபோலவே, கமலும் எக்கச்சக்க ரீச். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் அவர், அரசியல் சம்பந்தமான விஷயங்களில் அடிபட்டு அதையும் ஒரு கை பார்த்து வருகிறார். கமலுக்குத் திரையுலகத்தினர் பலர் ஆதரவளித்து வருகிறார்கள்.


தற்போது வெளிப்படையாகவே, கமலுக்கு சப்போர்ட்டாக இருப்பதாக குஷ்பு தன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். 'உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது, தைரியமாக இருங்கள் நண்பரே, என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. நீங்கள் எந்தப் பக்கமும் சாயாமல், எப்போதும் உண்மையின் பக்கமே நிற்க வேண்டும். எப்போதும் என் அன்பும் ஆதரவும் உண்டு’ என தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார் குஷ்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close