Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸாருக்கு நிலவேம்புக் கசாயம்!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நிலவேம்புக் கசாயம் விநியோகிக்கப்பட்டது. 

nilavembu kashayam

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை போலீஸார் அடுத்தடுத்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர், நிலவேம்புக் கசாயத்தை போலீஸாருக்கு இலவசமாக விநியோகிக்க உத்தரவிட்டார். அதன்படி ஆயுதப்படை போலீஸாருக்கு நேற்று நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிலவேம்புக் கசாயம் கொடுக்கப்பட்டது. இதை போலீஸார் பருகினர்.

nilavembu
 
 

சென்னை மாநகர போலீஸாருக்கு ஆங்காங்கே நிலவேம்புக் கசாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை அண்ணா வளைவு பகுதியில் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு போலீஸார் வழங்கினர். 

இதுகுறித்து சென்னை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "வேலை காரணமாக பெரும்பாலான போலீஸார், தங்களது உடல்நலத்தில் கவனம் செலுத்துவதில்லை. சமீபத்தில் சங்கீதா என்ற பெண் போலீஸ், ரத்தப் புற்றுநோயால் மரணமடைந்த தகவல், போலீஸ் கமிஷனருக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரைக் காப்பாற்ற போலீஸ் கமிஷனரும் நிதியுதவி அளித்தார். தற்போது, காய்ச்சல் பாதிப்பால் நான்கு போலீஸார் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமலிருக்க நிலவேம்புக் கசாயத்தை இலவசமாக வழங்க போலீஸாருக்கு உத்தரவிட்டார் கமிஷனர். இதையடுத்து, நிலவேம்புக் கசாயம் தயாரானது. கமிஷனர் ஏற்பாட்டில் நிலவேம்புக் கசாயம் சென்னை முழுவதும் உள்ள போலீஸாருக்கு விநியோகிக்கப்பட்டதால் ஒருசிலரைத் தவிர அனைவரும் ஆர்வத்துடன் அதைப் பருகினர்" என்றனர்.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close