Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரேஷன் பொருள் விவகாரம்! அமைச்சர் காமராஜ் விளக்கம்

ரேஷன் கார்டுகள் யாருக்கெல்லாம் ரத்து செய்யப்படும் என்பது குறித்த விதிமுறைகள் இன்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பிவந்த நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அமைச்சர் காமராஜ்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், 'சில பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடுத்துதான் நிருபர்களை அழைத்து இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தேன். ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்டம் மூலம் அனைவருக்குமான உணவு பாதுகாப்பினை தமிழகம் வழங்குகிறது. எனவே, அனைத்துத் தரப்பினரும் வழக்கம்போல ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கலாம். ரேஷன் பொருள்கள் வாங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

மத்திய அரசின் திட்டமான, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தை கடைசியாக செயல்படுத்தியது தமிழ்நாடு. அது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். சில நிபந்தனைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட பின்னர்தான் உணவு பாதுகாப்புத் திட்டத்தை தமிழகத்தில் ஏற்றோம். எனவே, அது குறித்து வெளியிடப்படும் அறிவிப்புகள் தமிழக அரசிதழில் வந்தாலும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படாது. பழைய விலையிலேயே ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும். விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் என இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அரசிதழில் சட்டத்திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருள்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்று விளக்கினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close