Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரனுக்குப் போட்டியாக நாளை அவசரக் கூட்டம்-அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு அழைப்பு!

அதிமுக கட்சி அலுவலகம்

 

அ.தி.மு.க வில் நடைபெற்று வரும் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தினகரனுக்குப் போட்டியாக எடப்பாடியும் அ.தி.மு.க.நிர்வாகிகள் கூட்டத்தை  நாளை கூட்ட உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இணைவதற்கு அறுபது நாள்கள் கால அவகாசம் கொடுப்பதாக தினகரன் அறிவித்திருந்தார். ஆகஸ்ட் 5-ம் தேதியோடு அறுபது நாள் கெடு முடிவடைய உள்ளது. ஆனால், தினகரனுக்கு எதிராக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்களும் செயல்பட்டு வரும் நிலையில், வரும் 5-ம் தேதி அன்று அ.தி.மு.க. அலுவலகத்துக்கு தினகரன் செல்லப்போவதாக தகவல்கள் வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் இன்று காலை அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு தினகரன் தரப்பிலிருந்து அழைப்பு கொடுக்கப்பட்டது. “5-ம் தேதி அன்று அனைவரும் சென்னையில் ஆஜர் ஆகவேண்டும” என்று தினகரன் தரப்பில் அறிவித்தனர். 

இந்நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அனைத்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு போனில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் 1-ம் தேதி மாலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என  அழைப்பு விடுத்துள்ளார்கள். தினகரன் தரப்பினர் கட்சி அலுவலத்துக்குள் நுழைவதற்கு முன்பே எடப்பாடி தரப்பினர் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றும் முடிவில், இந்த அவரச அழைப்பு அனைவருக்கும் போனில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close