Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திவ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மனித உரிமை அமைப்புகள்     

சமூக ஆர்வலரும் 'கக்கூஸ்' ஆவணப்படத்தைத் தயாரித்தவருமான திவ்யபாரதிக்கு எதிராக  சில அமைப்பினர்  சமூக ஊடகங்கள் மூலமாகவும் அலைபேசி வழியாகவும் ஆபாசமாக பேசியும், கொலைமிரட்டல் விடுப்பதாகவும்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.  இந்நிலையில், அவருக்கு ஆதரவாக செய்தியாளர் சந்திப்பை சமூக ஆர்வலர்கள் இன்று  ஏற்பாடு செய்திருந்தார்கள். 


தமிழ்நாடு சிவில் உரிமைக்கழகத்தின் பேரா.முரளி, சோக்கோ அறக்கட்டளை  சமூக ஆர்வலர் செல்வகோமதி பேசும்போது, ''மலம் அள்ளும் மனிதர்களின் கொடூர வாழ்வியலைப் பதிவு செய்த பெண் ஊடகவியலாளரை இந்தளவுக்கு டார்ச்சர் செய்யும் தன் கட்சியினரை டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிக்க வேண்டும். மேலும், சில அமைப்பினரும் போனில்  மிரட்டி வருகிறார்கள். தங்களுக்கு  உடன்பாடில்லாத கருத்தாக இருந்தாலும் சட்டரீதியாக வழக்கு தொடுக்கட்டும். அதைவிட்டு ஆபாசமாக பேசுவதையும் கொலை மிரட்டல் விடுப்பதையும் நிறுத்த வேண்டும். காவல்துறை, சம்பந்தப்பட்டவர்களின் போன் நம்பர்களை  டிரேஸ் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,  'கக்கூஸ்' படத்தை திரையிட அரசுதான் நெருக்கடி கொடுத்தது. இந்நிலையில், அவர் எடுத்த  ஆவணப்படத்தின்  நியாயத்தை உணராமல் அவரை மிரட்டுவது நியாயமில்லை. அவருக்கு ஊடகவியலாளர்கள்  ஆதரவு அளிக்க வேண்டும்'' என்றனர்.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close