Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோரிக்கையை வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர்களின் உரிமையைக் காக்கும் வகையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் முழுவதும், 42 இடைநிலை ஆசிரியர்களும் 2 பட்டதாரி ஆசிரியர்களும் உபரிப் பணியிடமாகக் கருதி பணி மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். இந்த பணியிட மாறுதலை உடனடியாக ரத்துசெய்து அவர்களை முன்பு பணிபுரிந்த இடங்களிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர். 

அத்துடன், சில ஆசிரியர்களை வெளி ஒன்றியங்களுக்கும் சில ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கும் பணியிடம் மாறுதல் செய்ததால் அவர்கள் குடும்பத்தைப் பிரிந்து சிரமங்களைச் சந்திக்கும் நிலைமை உருவாகி உள்ளது. அதனால் இந்தப் பணியிட மாறுதலைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முறைகேடாக வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்யக் கோரியும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டம் நடந்தபோது  மழை கொட்டத் தொடங்கியது. ஆனாலும், மழையையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close