Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 ஆண்டுகளாக இயங்கி வரும் பழுதடைந்த அரசுப் பேருந்தை மாற்ற கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக ஓடி பழுதடைந்துள்ள பேருந்தை மாற்றக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பொட்டகவயல், வாகவயல், நாரணமங்களம், அரசனூர் ஆகிய ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் கிராமங்களுக்கு வந்து செல்லும் அரசுப் பேருந்து மிகவும் பழுந்தடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணத்தின்போது பாதி வழியிலேயே அந்த பேருந்து பழுதடைந்து நின்று விடுகிறது. இந்தப் பேருந்தை நம்பி பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்லும் ஊழியர்கள் குறித்த நேரத்துக்குச் சென்று சேர முடியவில்லை. மழை காலங்களில் பேருந்துக்குள் குடைகளைப் பிடித்துக்கொண்டே பயணம் செய்யும் நிலை உள்ளது. இந்த நிலையில், இந்த பழுதடைந்த பேருந்தில் பயணிப்பதால், விபத்து எதிலும் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்துடனும் பயணம் செய்ய வேண்டியுள்ளது. 

பழுதடைந்த பேரூந்தை மாற்ற கோரிக்கை

இந்நிலையில், எங்கள் கிராமமான பொட்டகவயலுக்கு இயக்கப்பட்ட அந்த நகர் பேருந்து தற்போது சித்தார்கோட்டை வழியாகச் சென்று வருவதால் கூடுதல் கால விரயம் ஏற்படுகிறது. எனவே, ஏற்கெனவே இயங்கி வந்த வழித்தடமான ராமநாதபுரம்-தேவிப்பட்டினம்-பொட்டகவயல் நேர்வழி சாலையில் இயக்க வேண்டும். மேலும், இந்தப் பேருந்து வசதி துவக்கப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த நேர அட்டவணைப்படி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் வகையில் அந்தப் பேருந்து புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என கோரி இன்று ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close