Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எந்தவொரு வெற்றியும் தனிமனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல... பணி ஒய்வு விழாவில் கே.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ். பேச்சு!

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ். இன்றுபணி ஒய்வு பெற்றார். அவருக்கான பிரிவுஉபசார விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மிக கோலாகலகமாக நடைபெற்றது. விழாவை டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன் தலைமையேற்று நடத்தினார்.

1983-ம் ஆண்டு திண்டுக்கல்லில் ஏ.எஸ்.பி-யாக பணியைத் துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த முக்கியப் பிரச்னைகளில் அதிரடியாக செயல்பட்டு பல விருதுகள் வாங்கியவர் கே.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ். பணி ஓய்வு விழாவில் பல காவல்துறை அதிகாரிகள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். விழாவில் கே.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ் பேசியதாவது, "காவலர்கள் எப்போதும் மக்களுக்கான சிறந்த நண்பனாக மட்டுமே இருக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காவல்துறையில் வாகனங்கள், டெக்னாலஜி, கட்டட வசதிகள் மிகக் குறைவாக இருந்தது. அப்போது பல குற்றங்களை மிகத்திறமையாக காவலர்கள் கண்டுபிடித்தனர். தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால் அதன்மூலம் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது. எனவே, காவலர்கள் அனைவருமே டெக்னாலஜியை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றார். மேலும், அவர் 'எந்தவொரு வெற்றியும் தனிமனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல' எப்போதும் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கும் மனிதன் மட்டுமே வெற்றியடைகிறான்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close