Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாக சைதன்யா நடித்திருக்கும் 'யுத்தம் ஷரணம்' பட ட்ரெய்லர்!

'சாகசம் சுவாஸகா சாகிபோ', 'ராரன்டோய் வீடுக்கி சுட்டம்' படங்களுக்குப் பிறகு நாக சைதன்யா நடித்திருக்கும் படம் 'யுத்தம் ஷரணம்'. அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

 

 

இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. லாவண்யா த்ரிப்பதி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த், ரேவதி, ராவ் ரமேஷ், ப்ரியதர்ஷி, முரளி ஷர்மா ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். 'பெல்லிசூப்புலு' படத்துக்கு இசையமைத்த விவேக் சாகர் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். வழக்கமாக இவர் நடிக்கும் படங்களை அவரது தந்தை நாகர்ஜுனா தேர்வு செய்வார். ஆனால், இந்த முறை நடிகரும், இவரது உறவினருமான வெங்கடேஷ் 'யுத்தம் ஷரணம்' படத்தில் நடிக்குமாரு பரிந்துரை செய்திருக்கிறார். அதேபோல, இதுவரை நாக சைதன்யா என தன் பெயரை படங்களில் பயன்படுத்தி வந்தவர், இந்தப் படத்தில் சை அக்கினேனி என மாற்றியிருக்கிறார். கல்லூரியிலிருந்து ட்ராப் அவுட்டான மாணவன் செய்யும் ட்ரோன் (பறக்கும் கேமரா), அதன்மூலம் அவர் சந்திக்கும் பிரச்னைகளும், ஆக்‌ஷன்களுமாக பயணிக்கும் கதைதான் 'யுத்தம் ஷரணம்'. படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close