Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி குறைதீர்ப்பு நாள் கூட்டம்: 19 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 534 மனுக்கள் பெறப்பட்டது. கண் அறுவைச்சிகிச்சை செய்திட ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி உள்பட 82 பயனாளிகளுக்கு 19 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார்.

திருச்சி கலெக்டர் ராசாமணி

மாவட்ட நலப்பணி நிதிக்குழு மூலம், திருச்சி, எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் தனது  தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். அவருக்கு கண் அறுவைச்சிகிச்சை செய்திட ரூபாய் 50 ஆயிரத்துக்கான நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் திருச்சி, கே.சாத்தனூர், உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எச்.ஜெஸிமாபேகம் என்பவரின் மகனுக்கு மருத்துவச் செலவுக்கு ரூபாய் 10 ஆயிரமும், முசிறி வட்டம், திண்ணக்கோணத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் மகள் தனலெட்சுமி (45) என்பவரின் மருத்துவச் செலவுக்காக ரூபாய் 10 ஆயிரத்துக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியாக 13 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும், 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, மருத்துவ உதவித்தொகை மற்றும் இந்தியக் குழந்தைகள் நலக்குழு நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை என வழங்கப்பட்டது. கூடுதலாக திருச்சி மாவட்டம் தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங்களில் 2016 -17-ம் கல்வியாண்டில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை என சுமார்  82 பயனாளிகளுக்கு 19 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close