Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண் போலீஸுக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்!

போலீஸார் ஒருவர் கிராமத்தின் பொதுப்பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளார் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

"எங்கள் வயல்கள், தோட்டங்களுக்குச் சென்று வர பயன்படுத்திய புறம்போக்குப் பாதையை வேலி போட்டு தடை செய்து, தனது பயன்பாட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ளார் பெண் போலீஸ் ஒருவர். அவரிடம் இருந்து பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும்" என்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநாள் என்பதால், பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து ஆட்சியர் கோவிந்தராஜிடம் மனு கொடுக்க வைத்த கருப்பையன் என்பவரிடம் பேசினோம்.
 

கருப்பையன் கூறுகையில், "நாங்க கடவூர் வட்டத்துல உள்ள தொண்டமாங்கிணம் கிராமத்தைச் சேர்ந்தவங்க. எங்க கிராமம் மற்றும் அருகில் உள்ள குக்குராமங்களான சங்கன்பூசாரியூர், எரிச்சலூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும், எங்களின் காடுகள், தோட்டம், வயல்களுக்குப் போய்வர, தொண்டமாங்கிணத்தில் உள்ள புறம்போக்கு இடத்தைத்தான் பொதுப்பாதையாகப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், அந்தப் பாதையை சங்கன்பூசாரியூரைச் சேர்ந்த பெண் போலீஸாக பணிபுரியும் அகிலாண்டேஸ்வரி மற்றும் அவரது சகோதரர்களின் தூண்டுதலின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல், நல்லதம்பி, முனியப்பன் ஆகிய மூவரும் வேலி போட்டு அடைத்து, தங்கள் பயன்பாட்டில் வைத்துள்ளனர்.

இதனால், எங்கள் விவசாய நிலங்களுக்குப் போக பாதை இல்லாமல் நாங்கள் திண்டாடி வருகிறோம். ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி காவல்நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துவிட்டோம். அகிலாண்டேஸ்வரி காவல்துறையில் இருப்பதால், தனது அதிகாரத்தை வைத்து எங்கள் புகாரை ஒண்ணுமில்லாமல் செய்துவிடுகிறார். அந்தப் பக்கமாக போனாலே ஆயுதங்களால் எங்களைத் தாக்க வருகிறார்கள். அதனால்தான், நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அப்படியும் நடவடிக்கை இல்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கோம்" என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close