Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு பை - பை சொல்லும் காரைக்குடி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதாக நகராட்சி ஆணையாளர் சுந்தாராம்பாள் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி பிளாஸ்டிக் தடை


இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் "இனிமேல் பிளாஸ்டிக் பையில் சாமான்கள் தரும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பொருள்கள் வாங்கச் செல்வோர் துணிப்பைகளுடன் கடைக்குச் சென்று ஆதரவு தரவேண்டும். காவிரியோ, வைகையோ நமக்கில்லை. ஊற்றுநீரே நமக்கான ஒரே குடிநீர் ஆதாரம். பிளாஸ்டிக் பைகள் ஊற்றுநீரைத் தடுத்துவிடுகின்றன. எனவே பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, நம் எதிர்காலத் தலைமுறை குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்படாமல் பாதுகாப்பது நம் கடமை.

பிளாஸ்டிக் கழிவுகள்

இனிமேல் புதன்கிழமைகளில் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகள் பெறப்படும். இதர குப்பைகளை தினசரி வழங்கலாம் .தற்போது செயல்படத் தொடங்கிய இயற்கை உரக் கிடங்கில், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்" என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று மாலை 4 மணிக்கு , காரைக்குடி நகராட்சியில் ஆணையாளர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்களும்,பொதுமக்களும் வணிகர்களும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close