Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செலவைக் குறைக்க ஆடி கார் நிறுவனம் திடீர் முடிவு?

வரும் 2022-ம் ஆண்டுக்குள் 12 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 78,000 கோடி ரூபாய் வரை செலவினங்களைக் குறைக்க ஆடி நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடி, audi, கார்


சொகுசு கார் நிறுவனமான ஆடி நிறுவனம், தனது கார்களை எலெக்ட்ரிக் கார்களாக சந்தைக்குக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்திவருகிறது. வரும் ஆண்டுகளில், ஐந்து புதிய எலெக்ட்ரிக் கார்களைச் சந்தைக்குக் கொண்டு வர ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பிரஸ்ஸல்ஸில் 2018-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் டிரான்ஸ்போர்ட்-பயன்பாட்டு வாகனத்தைச் (எஸ்.யூ.வி) சந்தைக்குக் கொண்டு வர முயன்றுவருகிறது. 

ஆடி, தனது செயல்பாட்டு லாப விளிம்பை (profit margin) குறைந்தது ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்றளவில் வைத்திருக்க விரும்புகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இதன் லாப விகிதம், 8.9 சதவிகிதமாக இருக்கிறது. இந்த நிலையில் 12 பில்லியன் டாலர் அளவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செலவினங்களைக் குறைக்க, ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஆடி நிறுவனத்தின் தலைமையிடமான ஜெர்மனியிலுள்ள இன்ஜால்ஸ்டாட் நகரின் செய்தித் தொடர்பாளர் இதனை மறுத்துவிட்டார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close