Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பவன்கல்யாண்..!

ஆந்திரா சூப்பர் ஸ்டாரும் தெலுங்கு நடிகருமான பவன்கல்யாண், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள உத்தனம் பகுதியில், சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டி, ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதோடு, மருத்துவக் குழுவுடன் உத்தனம் பகுதிக்குச் சென்று மக்களுடன் பேசி, பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ள 100 கிராமங்களுக்கு நிவாரணம் கிடைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

அந்த 100 கிராமங்களில் 4,500 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 35,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை மற்றும் முந்திரி அதிக விளைச்சல் காணும் இந்தப் பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டவர்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் இவர்கள். பல ஆண்டுகளாக சிறுநீரக நோயால் போராடி அழிந்துவரும் இந்தக் கிராம மக்களின் நோயைத் தீர்க்க, பவன் கல்யாண் தமது கட்சியில் ஒரு தனிக்குழுவை அமைத்து சேவைசெய்ய முற்பட்டுள்ளார். மருத்துவக் குழு, இரண்டு நாள்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தது. கிராம மக்கள் சிறுநீரகக் கோளாறால் அவதிப்படுவதற்கான காரணங்கள் பற்றி நிலம், நீர் ஆகியவற்றைப் பரிசோதனைகள் செய்தனர். அந்தக் குழு அளித்த தகவல்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்து, அரசாங்கத்துடன் இணைந்து தமது கட்சியும் பணியாற்றும் என்று தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close