Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’தூய்மை சேலஞ்ச்’’ குப்பைக்குத் தங்கம் திட்டத்தில் இரண்டு பேருக்கு தங்கநாணயம்!

தூத்துக்குடி மாநகராட்சியில், ’தூய்மை சேலஞ்ச்’  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாகப் பிரித்து வழங்குபவர்களுக்கு, குலுக்கல் முறையில் தங்கநாணயம் வழங்கப்படும் என  மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அறிவித்தபடியே, முதல்கட்டமாக இரண்டு பேருக்கு தங்கநாணயம் வழங்கப்பட்டுள்ளது.

announce the winner

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், கடந்த மாதம் ‘தூய்மை சேலஞ்ச்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  கடந்த இரண்டு மாதங்களாக தூத்துக்குடியைத் தூய்மையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மட்டும்தான் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் பெறப்பட்டுவந்தன. மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளை மாநகராட்சி குப்பை வண்டிகளில் போட வேண்டும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு, துப்புறவுப் பணியாளர்களால் பெறப்பட்டு வந்தது. 

இவ்வாறு  குப்பையை தனித்தனியாகப் பிரித்துப் பெறப்படுவதால், மக்கும் குப்பையை உரமாக்குவதற்கும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது. இதில், முழுமையாக மாநகராட்சி மக்களை ஈடுபடுத்தும் இந்தத் திட்டத்தின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாகப் பிரித்து முறையாக வழங்குபவர்களுக்கு,  வீட்டுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் குலுக்கலில் தேர்வாகும் இரண்டு பெண்களுக்கு, ஒருகிராம் எடையுள்ள தங்கநாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

cash award to sweeper

அதன்படி, இந்தத் திட்டத்தின் முதல் குலுக்கல், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்வான ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ராஜகோபால்சாமி மற்றும் மணி நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் ஒருகிராம் தங்கநாணயம் வழங்கப்பட்டது. அதோடு, இந்தத் திட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த துப்புரவுப் பணியாளர்கள், மண்டலத்துக்கு ஒருவர் வீதம் நான்கு பேர் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,000-த்துக்கான  காசோலை வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், மாநகராட்சியுடன் இணைந்து செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தங்கநாணயம் மற்றும் காசோலையை வழங்கியது.

தொடர்ந்து குப்பைகளைப் பிரிக்காமல் வழங்கினால், குப்பைகள் பெறப்படாமல் திருப்பித் தரப்படும். தெருக்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு, திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி ஒரு லட்சம் வரை அபராதத் தொகை விதிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close