Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை

நீட் தேர்வு கொண்டுவந்தது முதல், குழப்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. மாணவர்கள் இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள். தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கென்று தனியாக உள்ஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதில், தமிழக அரசு கொண்டுவந்த அரசாணையை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தது.

தலைமை செயலகம்


இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவும் தமிழக அரசுக்கு எதிராகத்தான் வந்தது. இதனால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த பலரின்  மருத்துவக்கனவு கேள்விக்குறியானது. 

இந்நிலையில், நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர் நட்டாவை ஒரே நாளில் மூன்று முறை சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக அரசு தற்போது, நீதிமன்றத்தின் உத்தரவை எப்படி எதிர்கொள்வது என்றும்,  சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமா என்பது தெரியவரும்.

உயர் நீதிமன்றம் உடனடியாக மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதால், தமிழக அரசு வேகமாகச் செயல்பட்டு முடிவெடுக்கும் நிலையில் உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close