Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'' 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்!'' - கட்-ஆப் டாப்பர்ஸ் மாணவிகளின் கோரிக்கை

நீட் தேர்வு

மிழ்நாடு முழுவதும் 'நீட்' தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து அது தொடர்பாகக் கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில், 'சமச்சீர் பாடத்திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி, வெற்றிபெற்ற மாணவர்களைக் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்க்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 'நீட்' தேர்வினால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட மாணவிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேறுவேறு தனியார் பள்ளிகளில் பயின்று, கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகள் ஜனனி, சுகுணா, ப்ரீத்தா ஆகிய மூன்று மாணவிகள், இன்று தங்களின் பெற்றோருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

இதில், ஜனனி - 198.5 கட்-ஆப் மதிப்பெண்களும், சுகுணா - 198.5 மதிப்பெண்களும், ப்ரீத்தா - 197.50 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பு தேர்வில் பெற்றிருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற 'நீட்' தேர்வில் இவர்கள் தோல்வியையே தழுவியிருக்கிறார்கள்.

நீட் தேர்வு

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாணவிகள், "நாங்கள் மூவரும் மருத்துவக் கல்விக்குத் தேவையான அதிகபட்ச கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்வி பெற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். 10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம்பிடித்து, 12-ம் வகுப்புத் தேர்வில் மருத்துவக் கல்விக்கான அதிகபட்ச கட்-ஆப் பெற்றிருக்கிறோம். ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்ட 'நீட்' நுழைவுத் தேர்வில், நாங்கள் உள்பட மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத் தோல்விதான் கிட்டியிருக்கிறது. 200-க்கு 199.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கூட 'நீட்' தேர்வில் 37 சதவிகித மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவும் அவலம் உருவாகியிருக்கிறது.

'நீட்' தேர்வு முறை எங்களின் லட்சியத்தையும், எங்கள் பெற்றோர்களின் கனவுகளையும் முழுமையாகச் சிதைத்துவிட்டது. எங்களைப்போன்று தமிழகம் முழுவதும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதி, மருத்துவ கட்-ஆப் பெற்ற மாணவர்களின் வாழ்க்கையும் இந்த மத்திய அரசு கொண்டுவந்த 'நீட்' தேர்வினால் கேள்விக்குறியாகி இருக்கிறது. மருத்துவத்துறைமீது பற்றுகொண்டு, அதை எங்கள் வாழ்வின் லட்சியமாக நினைத்து அதற்கான பயிற்சிகளைப் பள்ளிப் பருவம் முதலே மேற்கொண்டு வந்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக இப்படியொரு சூழ்நிலை எங்களைத் தாக்கிவிட்டது. இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டில் முடங்கிப்போய்க் கிடக்கிறோம். எனவே, தமிழக அரசு நடத்தும் வழக்கமான மருத்துவக் கலந்தாய்வை இந்தமுறை நடத்தி, நாங்கள் மருத்துவக் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை அரசு வழங்க வேண்டும். அதனுடன் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் 'நீட்' தேர்வு முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்'' என்றனர்.

மாநில அரசை ஆட்டிப்படைக்கும் மத்திய அரசு, மாணவர்களின் நலனையும் விளையாட்டாகப் பார்ப்பதுதான் வேடிக்கை.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close