Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் குறித்த கேள்விகளுக்குக் கொந்தளித்த அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்- டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன் குறித்து செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி கேட்டதால் கொந்தளித்த அமைச்சர் ஜெயக்குமார், பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

முதல்வர் பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய 60 நாள் கெடுவிதித்தார் டி.டி.வி.தினகரன். இந்தக் கெடு வரும் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருஅணிகளும் இணைவதற்கான எந்தப் பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. இந்த நிலையில், வரும் 5-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு தினகரன் வருவதாகவும், தனது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தினகரனின் இந்தத் திடீர் அறிவிப்பால் முதல்வர் பழனிசாமி அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

இந்த பரபரப்புக்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "எங்களைப் பொறுத்தவரை அம்மாவின் ஆட்சி முழுமையாக ஐந்தாண்டு காலம் தொடரும். வருகின்ற காலத்திலும் அம்மாவின் ஆட்சி தொடரும். அதற்கேற்ற வகையில்தான் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய இடமில்லை. முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சி அலுவலகத்துக்குள் வழக்கம்போல் சென்று வருகிறோம். கட்சி அலுவலகத்துக்கு இன்று வழக்கம்போல் செல்கிறோம். இரு அணிகள் இணைப்பு விரைவில் நிகழும்" என்று கூறினார்.

கட்சி அலுவலகத்துக்கு தினகரன் வருவதாகக் கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது என்றார் ஜெயக்குமார்.

தினகரனின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, அனுமானத்துக்குப் பதில் தர முடியாது என்று ஆவேசப்பட்ட ஜெயக்குமாரிடம், தினகரன் குறித்து செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பினர். இதனால் கொந்தளித்த ஜெயக்குமார், ஒரு விஷயத்தை பலதடவை கேட்டுக்கொண்டே இருப்பீர்களா என்று கூறி காரில் சென்றுவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close