Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலவச ஹெல்மெட்டுகள் வழங்கி அதிரடிக் காட்டிய போலீஸ் அமைப்புகள்!

free helmet

'தலைக்கவசம்... நம் உயிர்க்கவசம்' என்று காவல்துறை காட்டுக்கத்தலாகக் கத்தி சொன்னாலும், விபத்துகள் நடக்கும் வரை அதைப் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை. இந்நிலையில், கரூரில் மாவட்ட காவல் நண்பர்கள் குழு மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புகள் சார்பில் 150 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் வழங்கி, தலைக்கவசத்தின் அவசியம் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் கலந்துகொண்டு, இலவச ஹெல்மெட்டுகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ம.தி.மு.க.வை சேர்ந்த கலையரசன் ஏற்பாடு செய்திருந்தார். விபத்துகளை முன்கூட்டியே தடுப்பது பற்றி கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன்,போக்குவரத்து காப்பாளர் தீபம் உ.சங்கர் ஆகியோர் பேசினர். 150 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கி பேசிய கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன்,  "விபத்துகளுக்குப் பிறகு சிகிச்சைகள் மேற்கொள்வதை விடுத்து, விபத்துகளில் இருந்து முன்கூட்டியே பாதுகாத்துக் மேற்கொள்வதுதான் சிறந்த செயல். அதற்காக,வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இது சட்டம் என்பதை விட, உங்களை, உங்கள் உடலை விபத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் என்பதை நீங்கள் உணர வேண்டும்" என்றார்.

முன்னதாக கரூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் நண்பர்கள் குழுவினர் சார்பில் திருவள்ளுவர் மைதானம் வரை விபத்து தடுப்புப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் கலையரசனிடம் பேசினோம். "கரூர் தமிழகத்தின் மையப் பகுதி. முக்கிய நெடுஞ்சாலைகளும்,தேசிய நெடுஞ்சாலைகளும் இந்த மாவட்டத்தை கிராஸ் செய்துதான் போகின்றன. பைபாஸ் சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமும் கரூர்தான். அதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதுக்குக் காரணம், வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதை உணர்வுதான்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close