Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டாலினை கைதுசெய்தது ஏன்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

கடந்த மாதம் 27-ம் தேதி, சேலம் மாவட்டம் கச்சராயன் குட்டை தூர் வாரும் பணியைப் பார்வையிடச் செல்ல இருந்த நிலையில், முன்கூட்டியே கைதுசெய்யப்பட்டார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தக் கைது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

stalin arrest


மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதற்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். கச்சராயன் குட்டையைப் பார்வையிடச் செல்லும் ஸ்டாலினைத் தடுக்கக்கூடாது என்று தி.மு.க சார்பில் வழக்குத் தொடரப்பட்டது இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் சரமாரியான கேள்விகளைக் கேட்டுள்ளது. 'கச்சராயன் குட்டையைப் பார்வையிடச் சென்ற ஸ்டாலினை தமிழக அரசு கைதுசெய்யவேண்டிய அவசியம் என்ன? சட்டம்- ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்றால், காவல்துறைதானே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலினை முன்கூட்டியே தடுத்தது ஏன்' என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இது தொடர்பாக இன்று பிற்பகல் 2.15-க்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close