Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5 லட்சம் புத்தகங்களுடன் நூலகம்... 7 அடி அஜித் சிலை - அடிக்கல் நாட்டிய நெல்லை அஜித் ரசிகர்கள்!

நெல்லையில் நடிகர் அஜித்குமாரின் முழு உருவச்சிலை அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சிலை மட்டும் அல்லாமல், மிகப்பெரிய அளவில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அந்த நூலகத்தின் மையத்தில்தான் இந்த சிலை நிறுவப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அடிக்கல் நாட்டும் விழா

நெல்லையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இருக்கிறது, தேவர்குளம் கிராமம். அங்குதான் ஐந்து ஏக்கர் நிலத்தில் நூலகத்துடன்கூடிய அஜித்குமாரின் சிலை  அமையவிருக்கிறது. `அகில இந்திய ஆசை நாயகன் அஜித்குமாரின் உதவும் கரங்கள்’ என்ற அமைப்பின் சார்பாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அந்த இடத்தில், மாணவர்கள் பயன் அடையும் வகையில் பிரமாண்டமான நூலகம் கட்டவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அன்பு

அகில இந்திய ஆசை நாயகன் அஜித்குமாரின் உதவும் கரங்கள்’ அமைப்பின் தலைவரான அன்புவிடம் இது குறித்துக் கேட்டோம். அவர் கூறியதாவது... 

``எனக்கு `தல’ அஜித்குமார் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. நான் அவரின் ரசிகன் என்பதால், அவர் நடித்த படங்களை மட்டும் பார்ப்பதில்லை. அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் கவனமாகக் கேட்டு அதன்படி செயல்பட்டுவருகிறேன். சமீபத்தில் பேசிய அவர், `எனக்கு ரசிகனாக இருந்து கட்-அவுட் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது போன்றவற்றைத் தாண்டி பொதுமக்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் செயல்படுவதுடன், மாணவர்களின் கல்விக்குத் தேவையான உதவிகளையும் செய்யுங்கள்’ எனக் கோரிக்கை வைத்தார். 

அதை ஏற்று மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் பிரமாண்டமான நூலகம் அமைக்கத் திட்டமிட்டேன். இதற்காக தேவர்குளம் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் மிகப்பெரிய நூலகம் கட்ட முடிவு செய்தோம்.  அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகுசிறப்பாக  நடைபெற்றது. மானூர், அழகியபாண்டிய புரம், குருக்கள்பட்டி, அச்சம்பட்டி, மூவிருந்தாளி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். 

இந்தப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் நூலகத்துக்குச் செல்ல வேண்டுமானால், சங்கரன்கோவில் அல்லது நெல்லைக்குத்தான் செல்ல வேண்டும். அதிக பணம் மற்றும் நேரத்தைச் செலவுசெய்து, பேருந்தில் நீண்ட தூரப் பயணத்தின் மூலம் நூலகத்தை அடையவேண்டியிருப்பதால், இந்தப் பகுதி மாணவர்கள் யாரும் நூலகங்களுக்குச் செல்வதில்லை. அதனால் அவர்கள் பயனடையும் வகையில் ஐந்து லட்சம் புத்தகங்கள்கொண்ட பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படும். அதில் அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் தரமான புத்தகங்கள் வாங்கி வைக்கப்படும். ஆசிரியர்கள், பேராசிரியர்களின் ஆலோசனைப்படி புத்தகங்களை வாங்குவோம். 

அஜித் சிலை அடிக்கல்

இந்தப் பிரமாண்டமான நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் அனைவரின் பார்வையிலும் படும்வகையில் ஏழு அடி உயரத்தில் `ஆசை நாயகன்' அஜித்குமாரின் உருவச்சிலை நிறுவப்படும். வெண்கலத்தில் அமைய உள்ள அந்தச் சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்துவிட்டோம். நூலகம் கட்டி முடிக்கப்பட்டதும் அதைத் திறந்துவைக்க வருமாறு அஜித்குமாரை அழைப்போம். அவர் நிச்சயம் வருவார் என நம்புகிறோம். நாங்கள் மதிக்கும் தலைவருக்காக, இதைச் செய்து முடிக்க எங்கள் அமைப்பினர் அனைவரும் உறுதியுடன் பணியாற்றி வருகிறோம்’’ என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close