Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெய ஜானகி நாயகா' பட டிரெய்லர்!

டோலிவுட்டின் மாஸ் மசாலா இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு. பத்ரா, துளசி, சிம்ஹா, தம்மு, லெஜெண்ட், சரைனோடு என இவரின் அத்தனை படங்களிலும் சண்டைக் காட்சிகளுக்கு நடுவே கொஞ்சம் கதையும் இருக்கும். போயபட்டி ஸ்ரீனு அடுத்ததாக இயக்கியிருக்கும் படமே 'ஜெய ஜானகி நாயகா'. 'அல்லுடு ஸ்ரீனு', 'ஸ்பீடய்னோடு' போன்ற படங்களில் நடித்த பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சரத்குமார், ரகுல் ப்ரீத் சிங், ப்ரயாகா ஜெய்ஸ்வால், தருண் அரோரா, ஜெகபதி பாபு ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். முந்தைய படங்களைப் போல போயபட்டியின் வெறித்தனமான வன்முறைக் காட்சிகள் நிறைந்த படமாகவும் கொஞ்சம் ரொமான்ஸும் கலந்த கலவையாக உருவாகியிருக்கிறது இப்படம். "எனக்கு ஆக்‌ஷன் இமேஜைக் கொடுக்க சரியான இயக்குநர் போயபட்டிதான். அவருடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி" எனப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார் ஹீரோ பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ்.  படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close